வனஸ்பதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனஸ்பதி கருநாடக இசையின் 4வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 4வது இராகத்திற்கு பானுமதி என்ற பெயர் உன்டு.
இலக்கணம் [தொகு]
| ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம1 ப த2 நி2 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க1 ரி1 ஸ |
- இந்து என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தில் 4 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நவநீதம் (40) ஆகும்.
- இதன் மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக மாரரஞ்சனி (25) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
- இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு.
உருப்படிகள் [தொகு]
| வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
|---|---|---|---|
| கிருதி | பரியசாக மாட | தியாகராஜ சுவாமிகள் | ரூபகம் |
| கிருதி | தாஸனேச குஹேசனே | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
| கிருதி | குருகுஹ ஸ்வாமினி | முத்துசுவாமி தீட்சிதர் | கண்ட த்ரிபுட |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||