கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜலார்ணவம் கருநாடக இசையின் 38வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 38வது இராகத்திற்கு ஜகன்மோகனம் என்ற பெயர்.
இலக்கணம் [தொகு]
ஜலார்ணவம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் ரத்னாங்கி (02) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள் [தொகு]