கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாடகாம்பரி கருநாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம் [தொகு]
ஹாடகாம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் விஷ்வம்பரி (54) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் காந்தார சுரம் முறையே கவாம்போதி (43) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
- சில ஜன்ய இராகங்கள் உண்டு.
உருப்படிகள் [தொகு]