தீரசங்கராபரணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கராபரணம் (அல்லது தீரசங்கராபரணம்) கருநாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் பிலாவல் தாட் என்றழைக்கப்ப்டுகிறது.
பொருளடக்கம் |
இலக்கணம் [தொகு]
| ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம1 ப த2 நி3 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம1 க3 ரி2 ஸ |
- பாண என்று அழைக்கப்படும் 5வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5வது மேளம். கடபயாதி திட்டத்தின் படி தீரசங்கராபரணம் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் மேசகல்யாணி ஆகும்.
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
உருப்படிகள் [தொகு]
- கிருதி : எதுட நிலிசிதே : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : எந்துகு பெத்தலவலெ : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : மநஸு ஸ்வாதீநமைந : ரூபகம் : தியாகராஜர்.
- கிருதி : ஸுந்தரேஷ்வராய : ரூபகம் : முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : ஸ்ரீ கமலாம்பிகயா : ரூபகம் : முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : ஸரோஜதள நேத்ரீ : ஆதி : சியாமா சாஸ்திரிகள்.
ஜன்ய இராகங்கள் [தொகு]
- பல ஜன்ய இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
| எண் | பெயர் | ஆரோகணம் | அவரோகணம் |
| 1 | அடாணா | ஸரிமபநிஸ் | ஸ்நிதாபமகாரிஸ |
| 2 | ஆரபி | ஸரிமபதஸ் | ஸ்நிதபமகரிஸ |
| 3 | கதனகுதூகலம் | ஸரிமதநிகபஸ் | ஸ்நிதபமகபமகரிஸ |
| 3 | கருடத்வனி | ஸரிகமபதநிஸ் | ஸதபகரிஸ் |
| 4 | கன்னடா | ஸகமபமதனிஸ் | ஸ்நிஸ்தபமகமரிஸ |
| 5 | கஜவர்த்தனி | ஸகமதநிஸ் | ஸ்தபமகரிஸ |
| 6 | குறிஞ்சி | (த)ஸரிகமபத | தபமகரிஸ(த) |
| 7 | கேதாரம் | ஸமகமபநிஸ் | ஸ்நிபமகஸரிகஸ |
| 8 | கோலாகலம் | ஸபமகமபதநிஸ் | ஸ்நிதபமகரிஸ |
| 9 | கௌடமலாரு | ஸரிமபதஸ் | ஸ்நிதமகரிஸ |
| 10 | சாயாசிந்து | ஸரிமபதஸ் | ஸ்தபமகரிஸ |
| 11 | சிந்துமந்தாரி | ஸரிகமபஸ் | ஸ்நிதபகமதபமரிஸ |
| 12 | சுத்தசாவேரி | ஸரிமபதஸ் | ஸ்தபமரிஸ |
| 13 | சுத்தவசந்தம் | ஸரிமபதநிஸ் | ஸ்நிதபமதமகஸ |
| 14 | தேவகாந்தாரி | ஸரிகரிமபதநிஸ் | ஸ்நித.பமகரி.ஸ |
| 15 | நவரோஜ் | பதநிஸ்ரிகமப | மகரிஸநிதப |
| 16 | நளினகாந்தாரி | ஸகரிமபநிஸ் | ஸ்நிபமகரிஸ |
| 17 | நீலாம்பரி | ஸரிகமபநிதநிஸ் | ஸ்நிபதநிபமகரிகஸ |
| 18 | பிலகரி | ஸரிகபதஸ் | ஸ்நிதபமகரிஸ |
| 19 | பூர்ணசந்த்ரிகா | ஸரிகமபதபஸ் | ஸ்நிபதபமகரிஸ |
| 20 | பேகடா | ஸகரிகமபதநிதபஸ் | ஸ்நிதபமகரிஸ |
| 21 | பேஹாக் | ஸகமபநிதநிஸ் | ஸ்நிதபமகமக.ரிஸ் |
| 22 | விவர்தனி | ஸரிமபஸ் | ஸ்நிதபமகரிஸ |
| 23 | ஹம்சத்வனி | ஸரிகபநிஸ் | ஸ்நிபகரிஸ |
| 24 | ஜனரஞ்சனி | ஸரிகமபதநிஸ் | ஸ்தபமரிஸ |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||