ரிஷபப்பிரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஷபப்பிரியா கருநாடக இசையின் 62வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.
பொருளடக்கம் |
இலக்கணம் [தொகு]
| ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம2 ப த1 நி2 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம2 க3 ரி2 ஸ |
- ருத்ர என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம மூர்ச்சனைகள் முறையே கோகிலப்பிரியா (11) மேளம் தோற்றுவிக்கும்.
உருப்படிகள் [தொகு]
- கிருதி : மதிமதக்கிஞ்சு : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : முத்துத் தாண்டவர்.
- கிருதி : கன நய தேசிக : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : மலையெனத்தலை : ஆதி : சுத்தானந்த பாரதியார்.
ஜன்ய இராகங்கள் [தொகு]
ரிஷபப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
- சுருதிரஞ்சனி
- பத்மகாந்தி
- ஜோதிஸ்பதி
- ஜௌடகாந்தாரி
- சுத்தசாரங்கா
- கார்த்தியாயனி
- கோப்பிரியா
- தேசோவதி
- பிருங்கத்வனி
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||