கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரசிகப்பிரியா கருநாடக இசையின் 72வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரசமஞ்சரி என்று பெயர்.
இலக்கணம் [தொகு]
ரசிகப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- "ஆதித்ய" என்றழைக்கப் படும் 12வது சக்கரத்தில் 6வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம் (த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- 36வது மேளமாகிய சலநாட்டையின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் காந்தார, நிஷாத மூர்ச்சனைகள் முறையே சிம்மேந்திரமத்திமம் (57), மாயாமாளவகௌளை (15) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
உருப்படிகள் [தொகு]