கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வகுளாபரணம் கருநாடக இசையின் 14வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 14வது மேளத்திற்கு வாடிவஸந்தபைரவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம் [தொகு]
வகுளாபரணம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது இராகம்.
- இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து தாரஸ்தாயி மத்திமம் வரை சஞ்சாரம் செய்வது இந்த இராகத்திற்கு இனிமையைக் கொடுக்கும்.
- இந்த இராகத்தில் வரும் அந்தர காந்தாரமும், கைசிகி நிஷாதமும் இவ்விராகத்தின் இரஞ்சகத்தை வெளிப்படுத்தும்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நாமநாராயணி (50) ஆகும்.
- இதன் ரி, ம, நி முறையே கிரக பேதத்தின் வழியாக கோசலம் (71), கீரவாணி (21), ஹேமவதி (58) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள் [1] [தொகு]
ஜன்ய இராகங்கள் [தொகு]
வகுளாபரணத்தின் ஜன்ய இராகங்கள் இவை.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.