கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரகுப்பிரியா கருநாடக இசையின் 42வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 42வது இராகத்திற்கு ரவிகிரியா என்ற பெயர்.
இலக்கணம் [தொகு]
ரகுப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் தானரூபி (06) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள் [தொகு]