கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகதீச்வரி கருநாடக இசையின் 34 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 34 வது இராகத்திற்கு போகாச்சாயாநாட என்று பெயர்.
இலக்கணம் [தொகு]
வாகதீச்வரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ருது என்றழைக்கப்படும் 6 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகிறன.
- சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- ஷட்சுருதி ரிஷபம் கம்பிதமாக இசைக்கப்பட வேண்டும்.
- விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நாசிகாபூஷணி (70) ஆகும்.
- வாகதீச்வரி மேளத்தின் மத்திமத்தை கிரக பேதம் செய்தால் நாகாநந்தினி (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் பவப்பிரியா (44) மேளமும் தோன்றுகிறன (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள் [தொகு]
ஜன்ய இராகங்கள் [தொகு]
வாகதீச்வரியின் ஜன்ய இராகங்கள் இவை.