கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாமளாங்கி கருநாடக இசையின் 55வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 55வது இராகத்திற்கு சியாமளம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம் [தொகு]
சியாமளாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இது திசி என்றழைக்கப்படும் 10வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் ஜங்காரத்வனி (19) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம, தைவத சுரம் முறையே கானமூர்த்தி (03), விஷ்வம்பரி (54) மேளங்கள் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள் [தொகு]