கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரிமனோகரி கருநாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்க்ப்பட்டுள்ளது.
இலக்கணம்[தொகு]
கௌரிமனோகரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுகின்றது.
- கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் தர்மவதி (59வது மேளகர்த்தா) ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, மத்திம, பஞ்சம சுரங்கள் கிரக பேதத்தின் வழியக முறையே நாடகப்பிரியா (10), வாசஸ்பதி (64), சாருகேசி (26) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கிறன.
- ஐரோப்பிய இசையில் உள்ள Melodic Minor Scale என்ற சுரக்கோர்வையின் ஆரோகணம் கௌரிமனோகரி மேளத்தை ஒத்துள்ளது. (அதன் அவரோகணம் 20 வது மேளமான நடபைரவியை ஒத்துள்ளது.)
உருப்படிகள்[தொகு]
ஜன்ய இராகங்கள்[தொகு]
கௌரிமனோகரியின் ஜன்ய இராகங்கள் இவை.
திரையிசைப் பாடல்கள்[தொகு]
- பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல்