சாருலதா மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாருலதா மணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பாடுவதோடு திரைப்படங்களுக்கும் பாடல்களை இவர் பாடுகிறார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர் பங்கேற்று வருகிறார். இவரின் பல்வேறு இசைத் தொகுப்புகள் குறுவட்டுகள் மூலம் வெளியாகியுள்ளன. கருநாடக இசையின் ராகங்கள் குறித்து விரிவாக விளக்கம் தரும் 'இசைப் பயணம்' (ஜெயா தொலைக்காட்சி) எனும் நிகழ்ச்சி இவரால் வழங்கப்பட்டதாகும். ஏறத்தாழ 80 பகுதிகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாருலதா_மணி&oldid=1674303" இருந்து மீள்விக்கப்பட்டது