ஜெயா தொலைக்காட்சி
![]() |
|
| நாடு | இந்தியா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து |
|---|---|
| துவக்கப்பட்ட நாள் | ஆகத்து 1999 |
| இணையதளம் | http://www.jayanetwork.in/ |
ஜெயா தொலைக்காட்சி (Jaya TV) இந்தியாவின் முதன்மையான தமிழ் மொழி செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றாகும். சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இத்தொலைக்காட்சி உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்து சென்ற துவக்க அலைவரிசைகளில் ஒன்றுமாகும். இத்தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெடுந்தொடர்கள் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து பார்வையாளர்களுக்காக தரிசனம் தொலைக்காட்சி மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
ஜெயா தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் [தொகு]
- ஜாக்பாட்- புதிர் விளையாட்டு நிகழ்ச்சி - அளிப்பவர் குஷ்பூ (முன்னதாக), நதியா
- ஆசினி பேசும் படம் - திரைப்பட மீளாய்வு - சுகாசினி மணிரத்தினம்
- லிட்டில் மாஸ்டர்ஸ் - குழந்தைகளுக்கான நிகழ்நிலை நிகழ்ச்சி
- ராகமாலிகா - பாடகர்களுக்கான நிகழ்நிலை நிகழ்ச்சி
- அரியுடன் நான் - பாடகர் அரிகரனுடனான நிகழ்நிலை பாடகர் தேர்வு நிகழ்ச்சி
- விசு மக்கள் அரங்கம் - நடிகர் விசுவுடனான பேச்சு நிகழ்ச்சி
- தேன்கிண்ணம்- பழைய திரைப்படப் பாடல்களின் தொகுப்பு
- மார்கழி மகா உத்சவம் - திசம்பர் - சனவரி மாத இசைவிழாவினை யொட்டி ஜெயா நடத்தும் கருநாடக இசைக் கச்சேரிகள்
தொடர்ந்து பத்தாண்டுகளாக ஒளிபரப்பிவரும் தமிழ் அலைவரிசைகளில் ஜெயா தொலைக்காட்சி இரண்டாவதாகும். இதனுடைய நிகழ்ச்சிகளின் தரத்தினால் தொடர்ந்து விருதுகளை வாங்கி வருகிறது.
அண்மையில் ஜெயா பிளஸ், ஜெயா மாக்ஸ் என்ற சேவைகளைத் தொடங்கியுள்ளது. திசம்பர் 2010 முதல் ஒளித குறியீட்டை எம்பெக் 2 இலிருந்து எம்பெக் 4க்கு மாற்றிக் கொண்டுள்ளது.
வெளியிணைப்புகள் [தொகு]
|
|||||||||||||||||||||||
