கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருணப்பிரியா கருநாடக இசையின் 24வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 24வது இராகத்திற்கு பெயர் வீரவசந்தம்.
இலக்கணம் [தொகு]
வருணப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- வேத என்று அழைக்கப்படும் 4வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுசுருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- சில ஜன்ய இராகங்கள் உண்டு.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் நீதிமதி (60) ஆகும்.
- இதன் பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக ராகவர்த்தனி (32) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள் [தொகு]