கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபபந்துவராளி இராகம் கருநாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.
இலக்கணம் [தொகு]
சுபபந்துவராளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- வசு எனப்படும் 8 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- காந்தாரத்தை அசைக்காமல் பாட வேன்டும்.
- கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- இது தேனுக இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் தைவதத்தை ஷட்ஜமாகக் கொண்டால் சலநாட்டை (36) என்ற மேளம் ஒலிக்கும்.
உருப்படிகள் [தொகு]
ஜன்ய இராகங்கள் [தொகு]
சுபபந்துவராளியின் ஜன்ய இராகங்கள் இவை.