கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடாணா கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 29வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இராகம்.
இலக்கணம் [தொகு]
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இவ்விராகம் ஔடவ - வக்ர சம்பூர்ண இராகம் ஆகும்.
இதர அம்சங்கள் [தொகு]
- ஆரோகணத்தில் க , த வர்ஜம். இது பாஷாங்க இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் சாதாரண காந்தாரமும், கைசிகி நிஷாதமும் அன்னிய ஸ்வரங்கள்.
- திரிஸ்ருதி தைவதமும், சதுஸ்ருதி தைவதமும் இந்த இராகத்தில் நன்கு பயன்படுத்தப்படுகின்றன..
- சஞ்சாரங்கள் பெரும்பாலும் மத்தியஸ்தாயியின் உத்தராங்கத்தையும், தாரஸ்தாயியின் பூர்வாங்கத்தையும் தழுவி நிற்கும்.
- வீரச்சுவை நிரம்பிய இராகம். அ _ டாணா : பிறப்பு, இறப்பு ஆகிய கட்டுக்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் பெற்ற இராகம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
- சென்ற நூற்றாண்டில் அடாணா அப்பய்யர் இந்த இராகத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கினார்.
- திருஞானசம்பந்தர் பாடிய "யாழ்முறிப்பண்" அடாணா இராகம் எனக் கருதப் படுகின்றது.
- புரந்தரதாசர் இயற்றிய முதல் பாட்டு "மோஸஹோதெனல்லோ" என்று தொடங்கும் அடாணா இராகப் பாட்டு; தியாகராஜர் இராமதரிசனம் பெற்ற பொழுது பாடியது "ஏல நீ தயராது" என்ற அடாணா பாடல்.
- முதற்காலத்தில், கதாகாலட்சேபங்களில் தூங்குவோரை எழுப்புவதற்குப் பாகவதர்கள் அடாணா இராகத்தில், மத்திம காலத்தில் ஒரு தில்லானாவையோ வேறொரு பாட்டையோ பாடுவது வழக்கம்.
உருப்படிகள் [தொகு]
அடாணா இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் [தொகு]
- யார் தருவார் இந்த அரியாசனம் :- மகாகவி காளிதாஸ்
- பால கனகமய :- சலங்கை ஒலி
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]