ஜகன்மோகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜகன்மோகினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ-ஷாடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஜகன்மோகினி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஜகன்மோகினி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க31 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம13 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகணத்தில் ரி, த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.

உருப்படிகள்[1][தொகு]

வகை உருப்படி தாளம் கலைஞர்
கிருதி "சோபில்லு சப்தசுவர" ரூபகம் தியாகராஜர்
கிருதி "மாமவ சததம்" ஆதி தியாகராஜர்
கிருதி "சிவகாமசுந்தரி" ரூபகம் கோபாலகிருஷ்ண பாரதியார்
கிருதி "எங்கும் நிறைந்த" கண்டசாபு எம். எம். தண்டபாணி தேசிகர்
கிருதி "ஸ்ரீ சுபதேவ" ரூபகம் முத்தையா பாகவதர்
கிருதி "காணமல் இருந்தால்" ஆதி முத்துத் தாண்டவர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜகன்மோகினி&oldid=1305982" இருந்து மீள்விக்கப்பட்டது