கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபோகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
[தொகு] இலக்கணம்
ஆபோகி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), மத்திமம் (ம1) , சதுஸ்ருதி தைவதம் (த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ப, நி என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு ஔடவ இராகம். இது ஒரு உபாங்க இராகம்.
[தொகு] இதர அம்சங்கள்
- இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
- இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் எப்போதும் பாடக் கூடியது.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம்..
- கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம். தியாகராஜ சுவாமிகளால் பிரசித்திக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று.
- மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் மத்திம மூர்ச்சனையே வலஜி இராகம் ஆகும்.
- கருணைச் சுவை கொண்ட இராகம்.
[தொகு] உருப்படிகள்
[தொகு] ஆபோகி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே :- வைதேகி காத்திருந்தாள்
- கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் :- சந்திரமுகி
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்