ஜனசம்மோதினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனசம்மோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுசுருதி ரிஷபம் (ரி2)ம் அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) மற்றும் கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச ரி2 க3 ப த2 நி2 ச் |
| அவரோகணம்: | ச் நி2 த2 ப க3 க3 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஷாடவ" இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||