ஆபேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
பொருளடக்கம் |
இலக்கணம் [தொகு]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
| ஆரோகணம்: | ச க2 ம1 ப நி2 ச் |
| அவரோகணம்: | ச் நி2த2 ப ம1 க2 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
குறிப்பு [தொகு]
- ↑ Music Handbook - Raga Index -A 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||