கே. ஏ. பக்கிரிசாமிபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஏ. பக்கிரிசாமிபாரதி இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞராவார். இசை நிகழ்ச்சிகள், இசைச் சொற்பொழிவுகள், செயல்முறை விளக்க நிகழ்ச்சிகள், கருத்தரங்க ஆய்வுச் சொற்பொழிவுகள் என இசை குறித்த பங்களிப்புகளை செய்து வருகிறார்.

இசைக் கல்லூரிப் பணிகள்[தொகு]

  1. 1982ஆம் ஆண்டு முதல் மதுரை அரசு இசைக் கல்லூரியின் புல்லாங்குழல் துறையில் பேராசிரியர்.
  2. 1995 முதல் 1996 வரை கோயமுத்தூர் அரசு இசைக் கல்லூரியின் முதல்வர்.
  3. 1996 முதல் 2000 வரை மதுரை அரசு இசைக் கல்லூரியின் முதல்வர்.
  4. 2000 முதல் கோயமுத்தூர் அரசு இசைக் கல்லூரியின் முதல்வர்.

பெற்ற பட்டங்களும், விருதுகளும்[தொகு]

  • அருந்தமிழ்ப் புலவர்

உசாத்துணை[தொகு]

இந்திய இசைக்கருவூலம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 'நூலாசிரியர் அறிமுகம்'.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._பக்கிரிசாமிபாரதி&oldid=2715760" இலிருந்து மீள்விக்கப்பட்டது