பாடி (இராகம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி3), சுத்த தைவதம் (த1), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச ரி1 ம1 ப நி3 ச் |
| அவரோகணம்: | ச நி3 ப த1 ப ம1 ரி1 ச் |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர். இதன் அவரோகணத்தில் பஞ்சமம் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.