காம்போதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காம்போதி கருநாடக இசையில் மிகப் பிரபலமான ஒரு இராகமாகும். இது 72 மேளகர்த்தா இராகங்களில் 28வது மேளமாகிய அரிகாம்போதி இராகத்தின் ஜன்னிய இராகமாகும். இதன் ஆரோகண அவரோகணம் பின்வருமாறு அமைகிறது.
- ஆரோகணம் : ச ரி க ம ப த
- அவரோகணம் : நி த ப ம க ரி ச
ஆரோகணத்தில் ஆறு சுரங்களையும் அவரோகணத்தில் ஏழு சுரங்களையும் கொண்ட ஒரு சாடவ சம்பூரண இராமாகும். சட்ஜம், பஞ்சமத்தோடு, சதுச்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், சதுச்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய இந்த ராகத்தின் சுரஸ்தானங்களாகும். ஆரோகணத்தில் நிஷாதம் வராமையினால் இது ஒர வர்ஜ இராகமாகிறது.