கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பிநாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
காப்பிநாராயணி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
காப்பிநாராயணி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
உருப்படிகள் [தொகு]
| கிருதி |
தாளம் |
கலைஞர் |
| ஸரஸ ஸாமதான பேததன்ட சதுர |
ஆதி |
தியாகராஜர் |
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]