கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
பரசு ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பரசு அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), சுத்த ரிசபம் (ரி1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996