சா ஆலாம் மக்களவைத் தொகுதி
சா ஆலாம் (P108) மலேசிய மக்களவை தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Shah Alam (108) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம்; கிள்ளான் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | சா ஆலாம் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சா ஆலாம்; பத்து தீகா கிள்ளான், கோத்தா கெமுனிங், கிள்ளான் துறைமுகம், டாமன்சாரா, டாமன்சாரா உத்தாமா, கோத்தா டாமன்சாரா |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
நீக்கப்பட்ட காலம் | கிள்ளான் தொகுதி (1974); டாமன்சாரா தொகுதி (1974); ரவாங் தொகுதி (1974); |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | அஸ்லி யூசோப் (Azli Yusof) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 170,590 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 140 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
சா ஆலாம் மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Shah Alam; ஆங்கிலம்: Shah Alam Federal Constituency; சீனம்: 白沙罗国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம்; கிள்ளான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P108) ஆகும்.
சா ஆலாம் மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1959-ஆம் ஆண்டில் இருந்து சா ஆலாம் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சா ஆலாம் மாநகரம்
[தொகு]பெட்டாலிங் ஜெயா மாநகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். பெட்டாலிங் ஜெயா பெருநகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகவும் டாமன்சாரா நகரம் விளங்குகிறது. இந்த நகரத்திற்கு அருகில் ஓடும் டாமன்சாரா நதியின் (Sungai Damansara) பெயரால் இந்தப் புறநகர்ப் பகுதி அழைக்கப் படுகிறது.[5]
1974-க்கு முன்னர், சா ஆலாம் என்பது கிள்ளான் மாவட்டத்தின் துணை மாவட்டமாக இருந்தது. சிலாங்கூர் மாநிலத் தலைநகரான சா ஆலாம், சுபாங் ஜெயா, பண்டார் சன்வே, கிளானா ஜெயா, கோத்தா கெமுனிங், போன்ற பகுதிகள், முன்னர் காலத்தில் டாமன்சாரா துணை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
இன்றைய நிலையில், சா ஆலாம் மாநகரத்தின் எல்லை வரையறை பெரிய அளவில் உள்ளது. பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வடக்குப் புறநகர்ப் பகுதி; கெப்போங், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதிகள்; மற்றும் கிழக்கில் சிகாம்புட் புறநகர்ப் பகுதி; தெற்கில் கிளானா ஜெயா புறநகர்ப் பகுதி போன்ற பல புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.[6]
கிள்ளான் மாவட்டம்
[தொகு]கிள்ளான் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா லங்காட் மாவட்டம்; கிழக்கில் பெட்டாலிங் மாவட்டம்; ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளன.[7] இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கிள்ளான். மற்ற நகரங்கள் கிள்ளான் துறைமுகம், பண்டமாரான், காப்பார், மேரு மற்றும் பண்டார் சுல்தான் சுலைமான்.
இந்த மாவட்டம் கிள்ளான் மற்றும் காப்பார் என இரண்டு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கிள்ளான் ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோலா கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் முடிவு அடைகின்றது. மேலும் இந்த மாவட்டத்தின் கடல் பகுதிகளில் கிள்ளான் தீவு; இண்டா தீவு; செட் மாட் ஜின் தீவு; நண்டு தீவு; தெங்கா தீவு; ரூசா தீவு; செலாட் கெரிங் தீவு; பிந்து கெடோங் தீவு போன்ற தீவுகள் உள்ளன.
சா ஆலாம் மக்களவை தொகுதி
[தொகு]சா ஆலாம் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கிள்ளான்; டாமன்சாரா; ரவாங் தொகுதிகளில் இருந்து 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மலேசிய மக்களவை | P080 | 1974–1978 | லியூ சிப் ஓன் (Lew Sip Hon) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது மலேசிய மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மலேசிய மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மலேசிய மக்களவை | P092 | 1986–1990 | ரகுமா ஒசுமான் (Rahmah Othman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மலேசிய மக்களவை | 1990–1995 | ரகீபா அப்துல் மனாப் (Rakibah Abdul Manap) | ||
9-ஆவது மலேசிய மக்களவை | P098 | 1995–1999 | சாலமோன் செலாமாட் (Salamon Selamat) | |
10-ஆவது மலேசிய மக்களவை | 1999–2004 | முகமட் சின் முகமட் Mohd Zin Mohamed | ||
11-ஆவது மலேசிய மக்களவை | P108 | 2004–2008 | அப்துல் அசீஸ் சம்சுதீன் (Abdul Aziz Shamsuddin) | |
12-ஆவது மலேசிய மக்களவை | 2008–2013 | காலித் அப்துல் சமத் (Khalid Abdul Samad) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது மலேசிய மக்களவை | 2013–2015 | |||
2015–2018 | அமாணா | |||
14-ஆவது மலேசிய மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | ||
15-ஆவது மலேசிய மக்களவை | 2022–தற்போது | அஸ்லி யூசோப் (Azli Yusof) |
சா ஆலாம் மக்களவை தேர்தல் முடிவுகள்
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
165,744 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
137,082 | 82.71% | ▼ -5.12 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
135,770 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
393 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
919 | - | - |
பெரும்பான்மை (Majority) |
18,095 | 13.33% | ▼ -22.97 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8] |
சா ஆலாம் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
அஸ்லி யூசோப் (Azli Yusof) |
பாக்காத்தான் (PH) | 61,409 | 45.23% | -14.77 ▼ | |
அபிப் பகார்டின் (Afif Bahardin) |
பெரிக்காத்தான் (PN) | 43,314 | 31.90% | +31.90 | |
இசாதுல் இசாம் அப்துல் சலீல் (Hizatul Isham Abdul Jalil) |
பாரிசான் (BN) | 28,266 | 20.82% | -2.88 ▼ | |
முகம்மது ரபீக் ரசீத் அலி (Muhammad Rafique Rashid Ali) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA / PEJUANG) |
2,781 | 2.05% | +2.05 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ https://www.mycensus.gov.my/index.php/census-product/publication/census-2020/myparlimen
- ↑ "Portal Rasmi PDT Petaling Sejarah Daerah Petaling". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.
- ↑ "Majlis Bandaraya Petaling Jaya (MBPJ)". Portal Rasmi Majlis Bandaraya Petaling Jaya (MBPJ). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
- ↑ "BACKGROUND". luas.gov.my.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
மேலும் காண்க
[தொகு]