சாகர் மாவட்டம்
சாகர் மாவட்டம் सागर जिला | |
---|---|
சாகர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சாகர் கோட்டம் |
தலைமையகம் | சாகர் |
பரப்பு | 10,252 km2 (3,958 sq mi) |
மக்கட்தொகை | 2,378,458 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 232/km2 (600/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 29.80% |
படிப்பறிவு | 76.46 |
பாலின விகிதம் | 893 |
மக்களவைத்தொகுதிகள் | சாகர் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சாகர் மாவட்டம் (Sagar District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சாகர் ஆகும். இது சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் இந்து, இசுலாமியர்களுக்கு அடுத்து சமண சமய மக்கள் தொகை 62,992 (2.65%) ஆகவுள்ளது. இம்மாவட்டத்தில் பண்டைய ஏரண் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது
மாவட்ட அமைவிடம்
[தொகு]சாகர் மாவட்டத்தின் வடக்கில் உத்தரப் பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டம், வடகிழக்கில் சத்தர்பூர் மாவட்டம், கிழக்கில் தமோ மாவட்டம், தெற்கில் நர்சிங்பூர் மாவட்டம், தென்மேற்கில் ராய்சென் மாவட்டம், மேற்கில் விதிஷா மாவட்டம், வடமேற்கில் அசோக்நகர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
நிலவியல்
[தொகு]விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள சாகர் மாவட்டத்தில் சுனார் ஆறு, தாசன் ஆறு, பியாஸ் ஆறு, வீணா ஆறுகள் பாய்கிறது. இவ்வனைத்து ஆறுகளும் கங்கை ஆற்றில் கலக்கிறது. இம்மாவட்டத்தின் வடக்கில் தேக்கு மரக்காடுகள் உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,378,458 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.20% மக்களும்; நகரப்புறங்களில் 29.80% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.63% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,256,257 ஆண்களும் மற்றும் 1,122,201 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 893 பெண்கள் வீதம் உள்ளனர். 10,252 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 232 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 76.46% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.85% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 67.02% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 356,903 ஆக உள்ளது. [1]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,198,297 (92.43 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 103,480 (4.35 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.
மொழிகள்
[தொகு]மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.