உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமியம் மூவாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம் மூவாக்சைடு
Ball-and-stick model of chromium trioxide
Powder of chromium trioxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம் டிரையாக்சைடு
வேறு பெயர்கள்
குரோமிக் நீரிலி, குரோமியம்(VI) ஆக்சைடு, குரோமிக் அமிலம்
இனங்காட்டிகள்
1333-82-0 Y
ChEBI CHEBI:48240 Y
ChemSpider 14212 Y
InChI
  • InChI=1S/Cr.3O Y
    Key: WGLPBDUCMAPZCE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cr.3O/rCrO3/c2-1(3)4
    Key: WGLPBDUCMAPZCE-YFSAMUSXAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14915
வே.ந.வி.ப எண் GB6650000
  • O=[Cr](=O)=O
UNII 8LV49809UC Y
UN number 1463
பண்புகள்
CrO3
வாய்ப்பாட்டு எடை 99.99 g·mol−1
தோற்றம் அடர் சிவப்பு திடமணிகள், நீருறிஞ்சி
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.7 கி/செ.மீ3 (20 °செல்சியசு)[1]
உருகுநிலை 197 °C (387 °F; 470 K) [1]
கொதிநிலை 250 °C (482 °F; 523 K)
சிதைவடையும்[1]
164.8 கி/100 mL (0 °செல்சியசு)
169 கி/100 மி.லி (25 °செல்சியசு)[1]
172.6 கி/100 மி.லி (40 °செல்சியசு)
198.1 கி/100 மி.லி (100 °செல்சியசு)[2]
கரைதிறன் H2SO4, HNO3, (C2H5)2O, CH3COOH, அசிட்டோன் முதலியவற்ரில் கரையும்.
4·10−5 செ.மீ3/மோல்[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−589.3 கியூ/மோல்[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
73.2 யூ/மோல்·கெல்வின்[4]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1194
GHS pictograms GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
GHS signal word அபாயம்
H271, H301, H311, H314, H317, H330, H334, H340, H350, H361, H372, H410[5]
P201, P220, P260, P273, P280, P284[5]
ஈயூ வகைப்பாடு ஒக்சியேற்றி O Very Toxic T+ சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
Carc. Cat. 1
Muta. Cat. 2
Repr. Cat. 3
R-சொற்றொடர்கள் R45, R46, R9, R24/25, R26, R35, R42/43, R48/23, R50/53, R62
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
Lethal dose or concentration (LD, LC):
80 மி.கி/கி.கி (எலிகள், வாய்வழி)[6]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

குரோமியம் மூவாக்சைடு (Chromium trioxide) என்பது CrO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம் டிரையாக்சைடு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் குரோமிக் அமிலத்தின் அமிலநீரிலி வகை உப்பாகும். சிலசமயங்களில் இதே பெயரில் வர்த்தகரீதியாகவும் இச்சேர்மம் விற்பனை செய்யப்படுகிறது[6]. நீரற்றநிலையில் குரோமியம் மூவாக்சைடு அடர் ஊதா நிறத்தில் திண்மமாகவும் ஈரமான நிலையில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகிறது. நிராற்பகுப்பு வினையின்போது உடனிகழ்வாக நீரில் கரைகிறது. மின்முலாம் பூசும் பயன்பாட்டிற்காக ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கிலோகிராம்கள் கணக்கில் உற்பத்தி செய்யப்படுகிறது[7]. வலிமையான ஆக்சிசனேற்றியான குரோமியம் மூவாக்சைடு ஒரு புற்றுநோய்க் காரணி என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

சோடியம் குரோமேட்டு அல்லது அதனுடன் தொடர்புடைய சோடியம் டைகுரோமேட்டுடன் கந்தக அமிலம் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக குரோமியம் மூவாக்சைடு தயாரிக்கமுடியும்:[6]

H2SO4 + Na2Cr2O7 → 2 CrO3 + Na2SO4 + H<

இம்முறையிலேயே பெரும்பான்மையான அளவில் குரோமியம் மூவாக்சைடு தயாரிக்கப்படுகிறது.[7]

கட்டமைப்பு

[தொகு]

திண்ம நிலை குரோமியம் மூவாக்சைடின் கட்டமைப்பானது, உச்சிகளைப் பகிர்ந்து கொள்கின்ற, நான்முக வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட குரோமியம் அணு சங்கிலிகளைக் கொண்டுள்ளது. இதனால் ஒவ்வொரு குரோமியம் மையமும் அடுத்துள்ள இரண்டு ஆக்சிசன் மையங்களைப் பகிர்து கொள்கின்றன. பகிர்ந்து கொள்ளாத ஆக்சிசன் அணுக்கள் ஒட்டுமொத்தமாக 1:3 என்ற விகிதவியல் அளவைத் தருகின்றன[8][9]

Ball-and-stick model of chains in the crystal structure of CrO3

அடர்த்திச் சார்பு கோட்பாட்டின்படி கணக்கிடப்பட்ட ஒற்றைப்படி குரோமியம் மூவாக்சைடின் கட்டமைப்பானது, D3h இடக்குழு வகை சமதள வடிவத்திற்கு மாறாக C3v இடக்குழு வகை பட்டைக்கூம்பாக இருக்குமென முன்கணிக்கப்பட்டது[10]

Ball-and-stick model of the DFT-calculated structure of the CrO3 monomer

வினைகள்

[தொகு]

197 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் குரோமியம் மூவாக்சைடு சிதைவடைகிறது. அவ்வாறு சிதையும் போது ஆக்சிசனை வெளியேற்றி முடிவாக குரோமியம்(III) ஆக்சைடைத் தருகிறது

4 CrO3 → 2 Cr2O3 + 3 O2

கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் குரோமியம் மூவாக்சைடு ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அசிட்டிக் அமிலத்தில் ஒரு கரைசலாகவும் அல்லது யோன்சு ஆக்சிசனேற்ற வினையெனில் அசிட்டோனில் ஒரு கரைசலாகவும் இது பயன்படுகிறது. இவ்வாக்சிசனேற்ற வினைகளில் Cr(VI) முதல்நிலை ஆல்ககால்களை அவற்றுடன் தொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலங்களாகவும் இரண்டாம்நிலை ஆல்ககால்களை கீட்டோன்களாகவும் மாற்றுகிறது.

முதல்நிலை ஆல்ககால்கள்

4 CrO3 + 3 RCH2OH + 12 H+ → 3 RCOOH + 4 Cr3+ + 9 H2O

இரண்டாம்நிலை ஆல்ககால்கள்

2 CrO3 + 3 R2CHOH + 6 H+ → 3 R2C=O + 2 Cr3+ + 6 H2O

பயன்பாடுகள்

[தொகு]

குரோமியம் மூவாக்சைடு முக்கியமாக குரோம் முலாம் பூசுவதில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக முலாம் செயல்முறையைப் பாதிக்கும் கூட்டுப்பொருளாக இச்சேர்மம் கருதப்பட்டாலும் மூவாக்சைடுடன் இது வினைபுரிவதில்லை. காட்மியம், துத்தநாகம் மற்றும் பிற உலோகங்களுடன் மூவாக்சைடு வினைபுரிந்து அரிமானத்தை முடக்குகின்ற குரோமேட்டு படலங்களை உருவாக்குகிறது. செயற்கை மாணிக்கக் கற்கள் தயாரிப்பிலும் குரோமியம் மூவாக்சைடு பயன்படுத்தப்படுகிறது. விண்வெளி பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினியத்தில் குரோமிக் அமிலக் கரைசல் நேர்மின்முனைப்படலப் பூச்சாகவும் பூசப்படுகிறது. அனைத்து வகையான நேர்மின்முனை பூச்சுகளையும் நீக்கும் முகவராக குரோமிக் அமிலம்/ பாசுபாரிக் அமிலக் கரைசல் செயல்படுகிறது.

பாதுகாப்பு

[தொகு]

குரோமிக் மூவாக்சைடு ஒரு உயர் நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மமாகும். அரிக்கும் தன்மையும் புற்றுநோய் உருவாக்கும் தன்மையும் கொண்டுள்ளது.[11] ஆறிணைதிறன் குரோமியத்திற்கு உதாரணமாக உள்ள இச்சேர்மம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சேர்மமாகக் கருதப்படுகிறது. தொடர்முடைய குரோமியம்(III) வழிப்பொருட்கள் ஆபத்தானவையல்ல. இவை குறைப்பானாகச் செயல்பட்டு ஆறினைய குரோமியம் உப்புகளை அழிக்கின்றன.

வலிமையான ஆக்சிசனேற்றியாக இருப்பதால் ஆல்ககால்கள் போன்ற கரிம வேதியியல் பொருட்களுடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் தீப்பற்றிக் கொள்கிறது.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
  2. Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ed.). D. Van Nostrand Company. p. 250.
  3. Pradyot, Patnaik (2003). Handbook of Inorganic Chemicals. The McGraw-Hill Companies, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
  4. chromium(VI) oxide
  5. 5.0 5.1 5.2 Sigma-Aldrich Co., Chromium(VI) oxide. Retrieved on 2014-06-15.
  6. 6.0 6.1 6.2 6.3 "Chromium trioxide". http://www.chemicalland21.com. AroKor Holdings Inc. பார்க்கப்பட்ட நாள் 2014-06-15. {{cite web}}: External link in |website= (help)
  7. 7.0 7.1 Anger, G.; Halstenberg, J.; Hochgeschwender, K.; Scherhag, C.; Korallus, U.; Knopf, H.; Schmidt, P.; Ohlinger, M. (2000). "Chromium Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a07_067. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
  8. எஃப். ஆல்பர்ட் காட்டன்; சாப்ரி வில்கின்சன்; கார்லோசு முரில்லோ; மேன்பிரட் பாக்மன் (1999), Advanced Inorganic Chemistry (6வது ed.), நியூ யார்க்கு: வைலி-இன்டசயின்சு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-19957-5
  9. Stephens, J. S.; Cruickshank, D. W. J. (1970). "The crystal structure of (CrO3)∞". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 26 (3): 222. doi:10.1107/S0567740870002182. 
  10. Zhai, H. J.; Li, S.; Dixon, D. A.; Wang, L. S. (2008). "Probing the Electronic and Structural Properties of Chromium Oxide Clusters (CrO3)n−and (CrO3)n(n= 1–5): Photoelectron Spectroscopy and Density Functional Calculations". Journal of the American Chemical Society 130 (15): 5167. doi:10.1021/ja077984d. 
  11. "Chromium Trioxide (MSDS)". J. T. Baker. பார்க்கப்பட்ட நாள் 2007-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்_மூவாக்சைடு&oldid=4088947" இலிருந்து மீள்விக்கப்பட்டது