தாமஸ் அக்குவைனஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாமசு அக்குவைனசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆக்வினாவின் தூய தோமா
Saint Thomas Aquinas
கார்லோ கிரிவெலியின் நூலொன்றிலுள்ள செயிண்ட் தாமஸ் அக்குவைனசின் படம்.
மறைவல்லுநர்
பிறப்பு 1225
ஆக்வினா, சிசிலி
இறப்பு 7 மார்ச் 1274
(பொசனோவா மடாலயம், லாசியோ, இத்தாலி)
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்
புனிதர் பட்டம் திருத்தந்தை இருபத்தி இரண்டாம் யோவான்-ஆல் 18 ஜூலை 1323, ரோம்
திருவிழா ஜனவரி 28
சித்தரிக்கப்படும் வகை புத்தகம், கோவில், சூரியன்
பாதுகாவல் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிலயங்கள்


தாமஸ் அக்குவைனஸ்
மேல்நாட்டு மெய்யியலாளர்
மத்தியகால மெய்யியல்
முழுப் பெயர் தாமஸ் அக்குவைனஸ்
சிந்தனை
மரபு(கள்)
Scholasticism, தோமியத்தின் நிறுவனர்
முக்கிய
ஆர்வங்கள்
மீவியற்பியல் (incl. இறையியல்), தருக்கம், மனம், அறிவாய்வியல், நன்னெறி, அரசியல்

புனித தாமஸ் அக்குவைனஸ் அல்லது தமிழில் ஆக்வினாவின் தூய தோமா (Saint Thomas Aquinas, 1225மார்ச் 7, 1274) ஒரு இத்தாலிய கத்தோலிக்க மதகுரு. டொமினிக்கன் பிரிவைச்சேர்ந்த இவர், ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். அக்குவைனஸ் என்பது இவரது இடத்தின் பெயராகையால் இவரைப் பெரும்பாலும் தாமஸ் என்றே அழைப்பர். இயற்கை இறையியலின் முன்னணிப் பரப்புரையாளராக இருந்ததுடன், இவர் மெய்யியல், இறையியல் என்பவற்றின் தோமியச் சிந்தனைப் பிரிவின் தந்தையும் ஆவார்.

கத்தோலிக்கத் திருச்சபை, குருமாருக்கான கல்வி பயிலுபவர்களுக்கான ஒரு மாதிரியாக இவரைப் போற்றியது. திருச்சபையால் மறைவல்லுனர் (Doctor of the Church) என்ற பட்டம் அளிக்கப்பட்ட முப்பத்து மூவரில், மிகச் சிறந்தவராக இவர் கருதப்பட்டார். இதன் காரணமாகப் பல கல்வி நிறுவனங்கள் இவருடைய பெயருடன் தொடங்கப்பட்டன.

இளமைக்காலம்[தொகு]

அக்குவைனஸ் இவரது தந்தையாரான கவுண்ட் லாண்டல்ப் என்பவரின் அரண்மனையில் பிறந்தார். இது அக்காலத்து சிசிலி இராச்சியத்துள் அடங்கியிருந்து. இவரது தாயார் வழியில் அக்குவைனஸ் புனித ரோமன் பேரரசர்களின் ஹோஹென்ஸ்டாபென் வம்சத்துக்கு உறவுள்ளவர். லாண்டல்பின் சகோதரர் சினிபால்ட் மொண்டே காசினோவில் இருந்த தொடக்க பெனடிக்டிய மடத்தின் மடாதிபதியாக இருந்தார். அக்குவைனசின் குடும்பத்தினர், அக்குவைனசும் தனது சிறிய தந்தையாரைப் போலவே ஒரு மடாதிபதியாக வேண்டும் என விரும்பினர். அக்காலத்தில் இத்தாலிய உயர்குடிக் குடும்பங்களில் இளைய மகன்களுக்கு இத்தகைய பாதையே பொதுவாக விரும்பப்பட்டது. அது அக்காலத்தில் ெசாத'து பிரிந'து விடாதிருக்க ைகயாளப்பட்ட ஓர் முைறயாகும். ெபற்ேறாரின் விருப்பப்படியன்று இவர் ெடாமினிக்கன் சைபயில் ஓர் குருவாவைதேய எண்ணியிருந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_அக்குவைனஸ்&oldid=1649023" இருந்து மீள்விக்கப்பட்டது