உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்யியலாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபயேல் வரைந்த ஏதென்சு பள்ளி , 1509–1511, வண்ண ஓவியம் பிளாட்டோவும் அறிசுட்டாட்டிலும் பிற பண்டைய மெய்யியலாள்ரோடு அறிவைப் பகிர்தலைக் காட்டுகிறது.

மெய்யியலாளர் (philosopher) என்பவர் மெய்யியலைப் பயில்பவர் ஆவார். மெய்யியலாளர் எனும் சொல், அறிவு வேட்பாளர் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லில் பண்டைக் கிரேக்கம்φιλόσοφος இருந்து உருவானது. இச்சொல்லை கிமு ஆறாம் நூற்றாண்டில் பித்தகோரசு எனும் கிரேக்கச் சிந்தனையாளரால் முதலில் உருவாக்கப்பட்டது.[1]

செவ்வியல் காலப் பொருளில், மெய்யியலாளர் என்பவர் சமகால மாந்த வாழ்க்கை எழுப்பும் கேள்விகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் குறிப்பிட்ட வாழ்க்கைமுறையைப் பின்பற்றி வாழ்பவர் ஆவார்]; இவர்கள் கோட்பாடுகளை ஆற்றுப்படுத்தவோ சில அறிஞர்களின் நூலுக்கு உரை எழுதவோ வேண்டிய கட்டயம் ஏதும் இல்லை.[2] இத்தகைய மிகவும் கட்டுபாடான வாழ்க்கை மேற்கொள்பவர்களே மெய்யியலாளர்களாக கருதப்பட்டனர். மேலும் அவர்கள் எலனிய மெய்யியலைக் கடைபிடித்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. φιλόσοφος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project.
  2. Pierre Hadot, The Inner Citadel. p. 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யியலாளர்&oldid=3951368" இலிருந்து மீள்விக்கப்பட்டது