கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பறியலூர் வீரட்டேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பறியலூர்
பெயர்:திருப்பறியலூர் வீரட்டேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பரசலூர்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரட்டேசுவரர், தட்சபுரீசுவரர்
தாயார்:இளங்கொடியம்மை, இளங்கொம்பனையாள்
தல விருட்சம்:பலா, வில்வம்
தீர்த்தம்:உத்தரவேதி, சந்திர புஷ்கரிணி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் (திருப்பறியலூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் செம்பொன்னார்கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீ அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டேஸ்வரர், இறைவி இளங்கொம்பனையாள்.

அமைப்பு[தொகு]

Keelaparasalur veeratesvarar temple1.jpg

கோயிலைச் சுற்றி பசுமையான வயல்கள் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவாயிலில் இறைவனும், இறைவியும் காளையில் அமர்ந்திருக்க வலப்புறம் விநாயரும், இடப்புறம் சுப்பிரமணியரும் சுதை வடிவில் உள்ளனர். மேற்கு நோக்கிய நிலையில் கோயில் உள்ளது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. மூலவராக வீரட்டானேஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கோஷ்ட கணபதி உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறைச்சுவற்றில் தட்சன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் மகாகணபதி, செந்தில் ஆண்டவர், மகாலெட்சுமி உள்ளனர். இடப்புறம் கற்பக விநாயகர், சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். வெளி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதியின் வலப்புறம் பாலாம்பிகை எனப்படும் இளங்கொம்பனையாள் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடம் உள்ளன. அம்மன் சன்னதியை அடுத்து கஜசம்ஹாரமூர்த்தி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் காசி விசுவநாதர் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக வலப்புறம் கால பைரவரும், இடப்புறம் நர்த்தன கணபதியும் உள்ளனர். திருச்சுற்றில் தொடர்ந்து சேத்திரபாலர், சிவசூரியன் உள்ளனர். நவக்கிரகங்கள் இல்லாதது இத்தலத்தின் சிறப்பாகும்.

சிறப்பு[தொகு]

இத்தலத்தில் வீரபத்திரரை ஏவி, தக்கன் கொல்லப்பட்டான் என்பது தொன்நம்பிக்கை. இது அட்டவீரத் தலங்களுள் ஒன்றாகும்

இவற்றையும் பார்க்க[தொகு]