ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பேரெயில்
பெயர்:ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:ஓகைப் பேரையூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஜகதீஸ்வரர்
தாயார்:ஜகந்நாயகி
தல விருட்சம்:நாரத்தை
தீர்த்தம்:அக்கினி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும்.

இறைவன், இறைவி[தொகு]

இத்தல இறைவன் ஜகதீஸ்வரர், இறைவி ஜகந்நாயகி.

சிறப்பு[தொகு]

பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 259

வெளி இணைப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]