திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம்,அபிராமி அந்தாதி பாடல் பெற்ற
திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம்[1]
பெயர்:திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கடையூர்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அமிர்தகடேசுவரா்
அமிர்தலிங்கேசுவரர்
உற்சவர்:காளசம்காரமூா்த்தி
தாயார்:அபிராமி தேவி, அபிராமசுந்தாி, அபிராமநாயகி, அபிராமவல்லி, அபிநயசரசநாயகி, அபிநயசுந்தாி, அமுதகடேஸ்வாி, அமுதநாயகி, அமுதாதேவி, அழகியமுலைநாயகி இடையழகுசுந்தாி, அஞ்சுகமொழியாள், ரத்னதொடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகம்தந்தநாயகி, சுகுணாம்பிகை, சந்திரஜோதி, சந்திரஆா்த்தி, சந்திரசேகாி, ஞானசோரூபினி, கனிமொழியாள்,
தல விருட்சம்:வில்வம், பிஞ்சிலம்(சாதி முல்லை)
தீர்த்தம்:அமிர்த புஷ்கரிணி, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்,அபிராமி அந்தாதி
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்,அபிராமி பட்டர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டடக்கலை
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை

அமைவிடம்[தொகு]

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் அமிர்தகடேஸ்வரர்,இறைவி அபிராமி.

வழிபட்டோர்[தொகு]

அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.

சிறப்புகள்[தொகு]

Tirukadayuramirtakadesvarartemple.jpg

மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.[1] தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம்.[2] இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 164,165
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2014-06-26 அன்று பரணிடப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]