திருச்சேறை செந்நெறியப்பர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருச்சேறை |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | செந்நெறியப்பர், சாரபரமேசுவரர் |
தாயார்: | ஞானவல்லி |
தல விருட்சம்: | மாவிலங்கை |
தீர்த்தம்: | மார்க்கண்டேய தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 95ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்[தொகு]
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருச்சேரையில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாகச் சென்றால் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
சிறப்புகள்[தொகு]
சாரபரமேசுவரர் கோவில் எனவும் உடையார் கோயிலெனவும் அழைக்கப்படும் இத்தலம் சைவம், வைணவம் ஆகிய மதங்களின் சிறப்பு வாய்ந்த தலமாகும். திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ளது போன்றே ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு இங்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது. சகல விதமான கடன் தொல்லையில் இருந்தும் நம்மைக் காக்க வல்ல அந்த சர்வேஸ்வரர், ரிண விமோசனர் என்ற பெயரோடு இங்கு எழுந்தருளியுள்ளார். இவரை பிரதிஷ்டை செய்தவர் வசிஷ்ட மகரிஷி.திங்கட்கிழமைகளில் இவரை வழிபடுவது சிறப்பு. ரிண விமோசனருக்கு அபிஷேகம் செய்து தலமரமான மாவிலங்கை இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்யப் படுகிறது. பதினோரு திங்கட்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் முற்றிலும் அகன்றுவிடும். ஸ்வாமி மற்றும் அம்பாள் ஆகியோர் கிழக்கு நோக்கிக் காணப்படுகிறார்கள். தௌமிய முனிவர் மார்க்கண்டேய முனிவரால் வணங்கப் பெற்றது. மார்க்கண்டேய லிங்கம் என்ற சன்னிதியும் ஆலயத்தில் உள்ளது. மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை நேரத்தில் சூரியனின் கிரணங்கள் செந்நெறியப்பரின் மீது படுகின்றன. அப்போது சூரிய பூஜை நடக்கிறது.
அமைப்பு[தொகு]
கோபுரம் இல்லாமல் இருந்த நுழைவாயிலில் தற்போது (பிப்ரவரி 2017)ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.அதனை அடுத்து கொடி மரம், பலி பீடம் காணப்படுகின்றன. அதற்கடுத்தபடியாக ஒரு சிறிய கோபுரம் உள்ளது.கருவறையின் முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையின் முன்பாக வலது புறத்தில் விநாயகரும், இடது புறத்தில் நால்வரும் உள்ளனர். கோஷ்டத்தில் லிங்கம், விநாயகர், நடராஜர், பைரவர், தட்சிணாமூர்த்தி, பைரவர், துர்க்கை, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் உள்ளார். திருச்சுற்றில் பின்புறம்விநாயகர், லிங்கம், ரிணவிசனலிங்கேஸ்வரர், முருகன், மகாலட்சுமி, லிங்கம் ஆகியோரைக் காணலாம். மூலவர் சன்னதியின் இடப்புறம் ஞானாம்பாள் உள்ளார். மொட்டை கோபுரமாக இருந்த நுழைவாயிலில் பெரிய ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவுறும் நிலையில் உள்ளது.இதற்கு முன்னர் 18 மார்ச் 1992 மற்றும் 4 ஏப்ரல் 2004இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுகின்றன.
வழிபட்டோர்[தொகு]
மார்க்கண்டேயர், தௌமியமுனிவர் ஆகியோர் வழிபட்ட தலமெனப்படுகிறது.
வெளி இணைப்புக்கள்[தொகு]
இவற்றையும் பார்க்க[தொகு]
திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: குடவாசல் கோணேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 95 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 95 |