இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்
| தேவாரம் பாடல் பெற்ற இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | வில்வவனம், சற்குணேசபுரம், மங்களநாயகிபுரம், மணக்கோலநகர் |
| பெயர்: | இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | இடும்பாவனம் |
| மாவட்டம்: | திருவாரூர் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | சற்குணநாதர்(சற்குணேசுவரர் ,கல்யாணேசுவரர், இடும்பானேசுவரர்) |
| தாயார்: | மங்களநாயகி(மங்கள வல்லி, கல்யாணேசுவரி) |
| தல விருட்சம்: | வில்வம் |
| தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம் |
| ஆகமம்: | காமிய ஆகமம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்மந்தர் |
இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தின் இறைவன் சற்குணநாதர், இறைவி மங்களநாயகி.
சிறப்புகள்
[தொகு]இத்தலத்தில் இடும்பன் வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி இடும்பியை வீமன் மணம் புரிந்தான் என்பதும் தொன்நம்பிக்கைகள். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சி பெற்ற தலங்களில் ஒன்று. பிதுர்முக்தித் தலம்.[1]
வழிபட்டோர்
[தொகு]இக்கோயிலிலுள்ள இறைவனை பிரமன், அகத்தியர், யமன், ஸ்ரீராமர் வழிபட்டுள்ளனர்.
தேவாரப்பாடல்
[தொகு]இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்:
நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
பாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 272
வெளி இணைப்புகள்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]| இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் |
|
| தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 108 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 108 | ||