உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
தண்டலை நீள்நெறி அக்னீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):தண்டலை நீள்நெறி
பெயர்:தண்டலை நீள்நெறி அக்னீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தண்டலைச்சேரி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நீள்நெறிநாதர்
தாயார்:ஞானாம்பிகை
தல விருட்சம்:குருந்தை
தீர்த்தம்:ஓமக தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் (தண்டலை நீள்கேசி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். இது ஒரு மாடக்கோயில் என்றாலும் திருப்பணிகளால் பிற்காலத்தில் உருமாறியது.[1]


அமைவிடம்

[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருவாரூரில் இருந்து 17 ஆவது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 110ஆவது சிவத்தலமாகும்.

முக்தி பெற்றோர்

[தொகு]

இத்தலத்தில் அரிவாட்டாய நாயனார் முத்தி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. அரிவாட்டாய நாயனார் அவதாரத் தலம்[2] இதே ஊரில் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் எனும் மற்றோர் சிவத்தலமும் உள்ளது

தலவரலாறு

[தொகு]

கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் சிவபெருமானுக்கு நூற்றுக்கணக்கான கோயில்கள் கட்டியவன். ஒரு முறை இவனுக்கு தொழு நோய் ஏற்பட்டது. நோய் தீர இவன் பல திருத்தலங்களுக்கு சென்றும் பயனில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க, சிவன் அசரீரியாக தோன்றி, கல்மாடு புல் திண்ணும் தலத்திற்கு சென்று வணங்கினால் நோய் தீரும் என்றார். மன்னனும் அப்படி ஒரு தலம் தேடி அலைந்தான். இத்தலத்தில் வழிபாடு செய்ய வந்தபோது, சிவனுக்கு அணிவிக்க அருகம்புல்லால் ஆன மாலையை கையில் ஏந்தி வந்தான். அப்போது சிவனுக்கு எதிரில் இருந்த நந்தி அந்த அருகம்புல் மாலையை இழுத்து தின்றது. இதைக்கண்ட மன்னனுக்கு சிவன் கூறியது நினைவுக்கு வந்தது. அவனது தொழு நோயும் நீங்கியது என்பது வரலாறாகும்.[3]

ஆமை அவதாரம் எடுத்த திருமால் செருக்கால் கடலைக் கலக்கிய போது சிவபெருமான் ஆமையைக் கொன்று ஆமை ஓட்டினை அணிந்தருளிய தலம் இது என்றும் கூறப்படுகிறது.

நூல்கள்

[தொகு]

இத்தல இறைவனாரைப் பற்றி படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலை நீள்நெறி எனும் சதக நூல் ஆகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்". Hindu Tamil Thisai. 2024-11-03. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 266
  3. "குன்ம நோய் நிவாரணத் தலம் நீள்நெறிநாதர் கோயில், திருத்தண்டலை நீள்நெறி". தினமணி. https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/jan/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-2838797.html. பார்த்த நாள்: 3 June 2023.