திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாரம் பாடல் பெற்ற
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், திருச்செங்காட்டங்குடி
பெயர்: திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: திருச்செங்காட்டங்குடி
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: உத்தராபதீசுவரர், ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்
தாயார்: சூளிகாம்பாள், திருக்குழலம்மை
தல விருட்சம்: ஆத்தி
தீர்த்தம்: ஒன்பது தீர்த்தங்கள்: சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 79ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.

பிற சிறப்புகள்[தொகு]

இத்தலத்தில் பிள்ளையார் கயமுகாசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டார் என்பதும், இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. [1] சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த மாளிகை இத்திருக்கோயிலையடுத்து கோயிலாக உள்ளது.

ஆதாரம்[தொகு]

  1. தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்

வெளி இணைப்புகள்[தொகு]

தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க[தொகு]