திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பள்ளியின் முக்கூடல்
பெயர்:திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பள்ளி முக்கூடல்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:முக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்
தாயார்:அஞ்சனாட்சியம்மை, மைம்மேவு கண்ணி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:முக்கூடல் தீர்த்தம்(கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக ஐதீகம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

திருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

மூலவர் விமானம்

ஜடாயு பேறு பெற்ற திருத்தலம். எனவே குருவி ராமேசுவரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள், தபோவதனி என்ற அரசியாரின் குழந்தையாகத் தோன்றி வளர, சிவபெருமான் வேதியராக வந்து திருமணம் புரிந்த திருத்தலமாகும்.[1] இத்தலத்தில் மூர்க்க மகரிஷி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 228,229

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க[தொகு]