உள்ளடக்கத்துக்குச் செல்

திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவெண்டுறை (வண்டு துறை) வண்டுறைநாதர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருவெண்டுறை
பெயர்:திருவெண்டுறை (வண்டு துறை) வண்டுறைநாதர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:திருவண்டுதுறை
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வண்டுறைநாதர், வெண்டுறைநாதர், பிரமபுரீசர், பிரமரேஸ்வரர், மதுவனேஸ்வரர்
தாயார்:வேனெடுங்கண்ணி,வேல்நெடுங்கண்ணி, பிரகதாம்பாள், சத்யதாயதாட்சியம்மை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 112ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில்லுள்ள கருவறையில் தான் பிருங்கி முனிவர் சமாதி உள்ளது.[சான்று தேவை]

அத மீதுதான் வண்டுறைநாதர் சிற்பம் அமைய பெற்றுள்ளது,அதன் படி பிருங்கி முனிவர் தவமிருந்த மலையானது பிருங்கி மலையென்று அழைக்கப்படுகிறது. தற்போது இம்மலை பரங்கி மலை என்று அழைக்கப்படுகிறது.பரங்கியர் என்று சொல்லப்படுகிற ஆங்கிலேயர்களால் கைப்பற்றி ஏசுசிலை நிறுவப்பட்டு புனித தோமையார் மலை என்றும் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

அமைவிடம்

[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவண்டுதுறை என்ற ஊரில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இச்சிவாலயத்தின் இறைவன் வண்டுறைநாதர், இறைவி வேனெடுங்கண்ணி. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி

தலவரலாறு

[தொகு]

பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை மட்டும் வலம் வந்த திருத்தலம்.இந்த கோவிலில், பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி ரூபத்தில் காட்சியளித்துள்ளார்.[2]

ஒப்பு நோக்க

[தொகு]

திருநல்லூர்(நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்) தலவரலாற்றிலும் இவ்வரலாறு கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308;திருமகள் நிலையம்;பக்கம் 262,263
  2. பிருங்கி முனிவருக்கு காட்சியளித்த நந்தீஸ்வரர்!. தினமலர் நாளிதழ். 1 செப்டம்பர் 2016. {{cite book}}: Check date values in: |year= (help)

இவற்றையும் பார்க்க

[தொகு]