உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னியூர் அக்கினீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருவன்னியூர் அக்கினீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவன்னியூர்
பெயர்:திருவன்னியூர் அக்கினீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:அன்னியூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அக்கினிபுரீசுவரர், அக்கினீசுவரர்
தாயார்:கௌரியம்மை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:அக்கினி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

திருவன்னியூர் அன்னியூர் அக்கினீசுவரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 62ஆவது சிவத்தலமாகும். காத்யாயணி மகளாக அம்பாள் தோன்றி இறைவனை மணக்கத் தவம் புரிந்து அவ்வெண்ணம் ஈடேறப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.

அமைவிடம்

[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அன்னியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் இத்தலம் காவிரி தென்கரைத் தலம் மற்றொன்று காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் பொன்னூர்.

அமைப்பு

[தொகு]
மூலவர் விமானம்

கும்பகோணம் காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் வந்துஅங்கிருந்து தெற்கில் திரும்பி வட மட்டம் சென்று அதே பாதையில் மேலும் சென்றால் கோயிலை அடையலாம்.

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடமும், நந்தியும் உள்ளன. பலி பீடம், நந்தியை அடுத்து மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலி பீடமும், நந்தியும் உள்ளன. மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் கணபதி, பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் 21 ஆகஸ்டு 2002 சித்ரபானு ஆவணி 5ஆம் நாள் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இச்சிவாலயத்தின் மூலவர் அக்னிபுரீஸ்வரர். இறைவி கவுரி பார்வதி.

வழிபட்டோர்

[தொகு]
  • அக்கினி தேவன் (வன்னி என்றால் நெருப்பு என்று பொருள்), அம்பிகை தவம் இருந்த தலம்

வெளியிணைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]