கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில்
பெயர்:கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் வெண்ணி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வெண்ணி நாதர்
தாயார்:அழகிய நாயகி
தல விருட்சம்:நந்தியாவர்த்தம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு
வரலாறு
தொன்மை:2000 ஆண்டுகள்
கட்டப்பட்ட நாள்:2டம் நூற்றாண்டு
அமைத்தவர்:கரிகால் சோழன்

கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 102ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்வெண்ணி எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-நீடாமங்கலம் அல்லது தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் சாலியமங்கலத்தைக் கடந்து கோயில்வெண்ணி நிறுத்தத்திலிருந்து இடப்புறமாக 1/2 கிமீ சென்றால் இக்கோயிலை அடையலாம்.[1]

இறைவன், இறைவி[தொகு]

இச்சிவாலயத்தின் இறைவன் வெண்ணிகரும்பேஸ்வரர். இறைவி அழகிய நாயகி.

சிறப்புகள்[தொகு]

இத்தலம் முசுகுந்த சக்கரவர்த்தி திருப்பணி செய்த தலமாகும். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார் இங்கு வாழ்ந்துள்ளார்.[2]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 254

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க[தொகு]