உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்புகலூர்
பெயர்:திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்புகலூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வர்த்தமானீஸ்வரர் (வர்த்தமானேசுவரர்)
தாயார்:மனோன்மணியம்மை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் (வர்த்தமானீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 76ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே அமைந்துள்ளது.[1]

கோயிலுக்குள் கோயில்

[தொகு]

பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயிலின் மூலவரான அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் எனப்படும் திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயிலானது கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். வர்த்தமானீஸ்வரர் கோயில் சன்னதிக்குத் தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. அருகே சுவரில் ஞானசம்பந்தர் திருப்புகலூர் வர்த்தமானீசுரத்தைப் போற்றிப் பாடிய பதிகம் காணப்படுகிறது.

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் வர்த்தமானீஸ்வரர்,இறைவி மனோன்மணியம்மை.

முருக நாயனார்

[தொகு]

இங்கு முருக நாயனாருக்குத் தனிச்சந்நிதி உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-13.

இவற்றையும் பார்க்க

[தொகு]

படத்தொகுப்பு

[தொகு]