திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருமருகல்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாணிக்க வண்ணர், ரத்னகிரீசுவரர்
தாயார்:வண்டுவார் குழலி, ஆமோதள நாயகி
தல விருட்சம்:மருகல் (வாழையில் ஒருவகை)
தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம் (மாணிக்க தீர்த்தம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும்.[1]

அமைவிடம்[தொகு]

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் சடையாய் எனுமால் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்க வண்ணர்,இறைவி வண்டுவார் குழலி.

அமைப்பு[தொகு]

கோயிலின் முன்பாக குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் நுழைவாயிலின் வலப்புறம் சனீஸ்வரர், உற்சவ விநாயகர், இடது புறம் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமண மண்டபம், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், நாகர், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை, சம்பந்தர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும், அடுத்து நடராஜர் சன்னதியும், வண்டுவார்குழலி (ஆமோதளநாயகி) சன்னதியும் உள்ளன. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் யமுனா சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வெளிச்சுற்றில் சாஸ்தா, பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி, சுரம் துர்த்த விநாயகர், சந்தான விநாயகர் ஆகியோர் உள்ளனர். மருதவுடையார்-சவுந்தரநாயகி சன்னதியும் இச்சுற்றில் உள்ளது. அதற்கு முன் நந்தி பலிபீடத்துடன், யாகசாலை, பராசரர் பூசித்த லிங்கம், காசி விசுவநாதர் உள்ளிட்டோர் உள்ளனர். 11 செப்டம்பர் 1974இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

படத்தொகுப்பு[தொகு]