திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | மேலைத்திருக்காட்டுப்பள்ளி, அக்னீஸ்வரம் |
பெயர்: | அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்காட்டுப்பள்ளி |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அக்கினீஸ்வரர், தீயாடியப்பர் |
தல விருட்சம்: | வன்னி, வில்வம் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி ஆறு |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும்.
கோயில் அமைப்பு
[தொகு]இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.
இயற்கை அமைப்பு
[தொகு]- காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி - குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்
- கோட்டை ஆஞ்சநேயர் ஆலயமும், கோட்டை காளி ஆலயமும் பழமையான பிற முக்கியமான கோவில்களாகும்.
- இவ்வூரின் பெரும்பான்மையானோர் விவசாயம் செய்து வாழ்க்கின்றனர்.
தல வரலாறு
[தொகு]- அக்கினி வழிபட்ட தலமாதலால் இக்கோயிலுக்கு 'அக்னீஸ்வரம்' என்று பெயர்.
- உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனது பூசைக்காக பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூட்டி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண், மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப் பட்டுவருகிறது.
கோயில் சிறப்பு
[தொகு]- இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாட்களில் நீராடி வழிபடுவது சிறப்பென்பர்.
- இக்கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.
- மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். படிகள் இறங்கி சுற்றி வலம் வரலாம்.
- முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில் பள்ளி என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருந்ததற்கான சான்று என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது.
மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. (காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.)
திருத்தலப் பாடல்கள்
[தொகு]இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
இவற்றையும் பார்க்க
[தொகு]- திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்
- சிவத் தலங்கள்
- தேவாரத் திருத்தலங்கள்
- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
- திருஞான சம்பந்தர்
- சுந்தரர்
- திருநாவுக்கரசர்
வெளி இணைப்புகள்
[தொகு]- மேலைத்திருக்காட்டுப்பள்ளி தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2015-03-18 at the வந்தவழி இயந்திரம்
- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 9 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 9 |