திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கோழம்பம் |
பெயர்: | திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்குழம்பியம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோழம்பநாதர், கோகிலேசுவரர் |
தாயார்: | சௌந்தர நாயகி |
தீர்த்தம்: | மது தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருக்கோழம்பம் - திருக்குழம்பியம் கோழம்பநாதர் கோயில், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 35ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து கோயிலுக்கு வரலாம். (ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்)
அமைவிடம்[தொகு]
இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல மூர்த்தி , பசுவின் கால் குளம்பு இடறியபோது வெளிப்பட்டார் என்பது வரலாறு. சந்தன் என்பான் இந்திர சாபத்தினால் குயில் உரு அடைந்து எங்கும் பறந்து திரிய, இவ்விடம் வந்து பூசித்த போது சுய உருவம் அடைந்தான்.
இறைவன், இறைவி[தொகு]
இக்கோயிலில் உள்ள இறைவன் கோழம்பநாதர், இறைவி சௌந்தரநாயகி.
அமைப்பு[தொகு]
நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கோயிலின் இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. சன்னதியின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர். எதிரே நந்தி, பலிபீடம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தை அடுத்துள்ள திருச்சுற்றில் பைரவர், சூரியன் உள்ளனர்.மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் கோஷ்ட விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சுப்ரமணியர், சோழலிங்கம், வீரலட்சுமி உள்ளிட்டோர் உள்ளனர்.
சிறப்பு[தொகு]
இது அம்பிகை சிவபெருமானை வழிபட்ட தலம்.
இவற்றையும் பார்க்க[தொகு]
- சிவத் தலங்கள்
- தேவாரத் திருத்தலங்கள்
- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
- திருஞான சம்பந்தர்
- சுந்தரர்
- திருநாவுக்கரசர்
உசாத்துணை[தொகு]
அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோயில்கள்
புகைப்படத்தொகுப்பு[தொகு]
திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 35 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 35 |