திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கொண்டீச்சரம்
பெயர்:திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கொண்டீச்சரம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பசுபதீஸ்வரர், பசுபதீசுவரர், பசுபதி நாதர்
தாயார்:சாந்த நாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:க்ஷீர புஷ்கரணி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 72ஆவது சிவத்தலமாகும். அம்பிகை பசு வடிவில் இறைவனை வழிபட்ட தலம்.

அமைவிடம்[தொகு]

இச்சிவத்தலம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் வட்டத்தில் திருக்கொண்டீஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

மூலவர் விமானம்

கோயில் வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது விநாயகர் உள்ளார். அடுத்து பலிபீடமும், நந்தி மண்டமும் உள்ளன. திருச்சுற்றில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பிரம்மபுரீஸ்வரர், அகஸ்தீஸ்வரர், நாகம், சூரியன், பைரவர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரக சன்னதி உள்ளது. மடப்பள்ளியும், யாகசாலையும் உள்ளன. கருவறையில் மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறம் சாந்தநாயகி அம்மன் சன்னதி உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இச்சிவத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர். இறைவி சாந்த நாயகி.

மூத்ததேவி[தொகு]

ஜேஷ்டா தேவி எனும் ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியான தவ்வையின் பழைமையான சிலை இங்குள்ளது. இத்தெய்வத்திடம் சோம்பலின்றி சுறுசுறுப்பை வேண்டலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க[தொகு]