2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2020 கோடை ஒலிம்பிக் போட்டிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
XXXII ஒலிம்பிக் போட்டிகள்
குறிக்கோள் 'நாளை கண்டுபிடி
Discover Tomorrow'

2020 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2020 Summer Olympics, 2020年夏季オリンピック), அலுவல் முறையில் 32வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXXII Olympiad) என்பது சப்பானின் டோக்கியோ நகரில் 2020 சூலை 24 முதல் ஆகத்து 9 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 2013 செப்டம்பர் 7 இல் புவனெசு ஐரிசு நகரில் இடம்பெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 125வது அமர்வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்த டோக்கியோ தெரிவு செய்யப்பட்டது.[1][2] டோக்கியோ ஏற்கனவே 1964 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]