தௌலதாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தௌலதாபாத்
दौलताबाद
தேவகிரி
சிறு நகரம்
தேவகிரி எனும் தௌலதாபாத் கோட்டை
தேவகிரி எனும் தௌலதாபாத் கோட்டை
நாடுஇந்தியா
மாநிலம்மகாராஷ்டிரம்
பிரதேசம்மரத்வாடா
மாவட்டம்அவுரங்காபாத்
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்431002
வாகனப் பதிவுMH-
தேவகிரி கோட்டையின் நுழைவாயில்

தௌலதாபாத் (Daulatabad or Devagiri) தென்னிந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின், அவுரங்காபாத் மாவட்டத்தில் கோட்டையுடன் அமைந்த ஊராகும். தௌலதாபாத்தின் முன்னாள் பெயர் தேவகிரி ஆகும்.[1][2][3]

அவுரங்காபாத் நகரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தேவகிரி எனும் தௌலதாபாத் நகரம் கி பி 850 முதல் 1334 முடிய யாதவப் பேரரசின் தலைநகராக விளங்கியது. [4][5] மத்திய காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரமாக இருந்த தௌலதாபாத் நகரம் தற்போது சுருங்கி சிறு ஊராக காட்சி அளித்தாலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[6][7][8][9]

கி பி 13277-இல் முகமது பின் துக்ளக் தனது அரசின் தலைநகரத்தைத் தில்லியிலிருந்து, இந்தியாவிற்கு நடுவில் இருந்த தேவகிரிக்கு வலுக்கட்டாயமாக மாற்றினார். பின்னர் தேவகிரியிலிருந்து மீண்டும் தில்லிக்கே தனது தலைநகரை மாற்றினார்.[10]

அமைவிடம்[தொகு]

தேவகிரி எனும் தௌலதாபாத் நகரம் அவுரங்காபாத் நகரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் எல்லோரா குகைக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது.[11]

வரலாறு[தொகு]

தேவகிரி நகரம் கி பி 1187-இல் ஐந்தாம் பில்லம்மா எனும் யாதவ இளவரசனால் நிறுவப்பட்டது.[12]

தில்லி சுல்தான் படையெடுப்பு[தொகு]

தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகள் மாலிக் கபூர் தலைமையில் கி பி 1306 மற்றும் 1307 -இல் தேவகிரி யாதவ நாட்டுடன் நடந்த போர்களில் மாலிக் கபூர் வென்றார். போர் ஒப்பந்தப்படி, தேவகிரி அரசின் கருவூலங்கள் மாலிக்கபூருக்கு திறந்து விடப்பட்டது. மேலும் ஆண்டு தோறும் தில்லி சுல்தானகத்திற்கு ஒரு பெருந்தொகை திறையாக செலுத்த வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது.

முகலாயர் படையெடுப்பு[தொகு]

தக்காணத்தின் முகலாய ஆளுனராக இருந்த ஷாஜகான் 1632-இல் தௌலதாபாத் கோட்டையைக் கைப்பற்றி நிஜாம் ஷாகியின் இளவரசன் உசைன் ஷாவை சிறை பிடித்தார்.[13]

நினைவுச் சின்னங்கள்[தொகு]

தேவகிரி கோட்டை[தொகு]

தௌலதாபாத்தில் உள்ள கருங்கற்களால் கட்டப்பட்ட வலிமை மிக்க தேவகிரி கோட்டை 200 மீட்டர் உயரமுடையது. மூன்று அடுக்கு கொண்ட தேவகிரி கோட்டையின் வெளிச்சுவர் 2.75 மைல்கள் (4.43 km) சுற்றளவு கொண்டது.[14]

சந்த் மினார்[தொகு]

தேவகிரி கோட்டையின் மினார்

210 அடி உயரமும் 70 அடி சுற்றளவும் கொண்ட அழகிய சந்த் மினார் மண்டபம் பாரசீகக் கட்டிட கலைநயத்தில் கட்டப்பட்டுள்ளது. தேவகிரி கோட்டைய அலாவுதீன் பாமினி சுல்தான் கைப்பற்றியதன் நினைவாக 1445-இல் இந்த மினார் கட்டப்பட்டது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தௌலதாபாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 6,096 ஆக உள்ளது. மக்கள் தொகையில் 3,183 ஆண்களும்; 2,913பெண்களும் உள்ளனர். இக்கிராமத்தில் 1,178 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தின் சராசரி படிப்பறிவு 79.31 %% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.22 %% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.83 %% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆக 895 உள்ளது. பட்டியல் சமூகத்தினர் மக்கள் தொகை 792 ஆகவும்; . பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 52 ஆகவும் உள்ளது. [15]

போக்குவரத்து வசதிகள்[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

அவுரங்காபாத் - எல்லோரா தேசிய நெடுஞ்சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்விடத்தை சாலை வழியாக அடையலாம்.[16]

தொடருந்து[தொகு]

புனே - மன்மாட் நகரங்களுக்கிடையே செல்லும் தொடருந்துகள் அனைத்தும் தௌலதாபாத் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[17]

இதனயும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Devagiri-Daulatabad Fort" (in English). Maharashtra Tourism Development Corporation (மகாராட்டிரம், India). http://www.maharashtratourism.gov.in/MTDC/HTML/MaharashtraTourism/TouristDelight/Forts/Forts.aspx?strpage=DevagiriDaulatabadFort.html. 
 2. "मध्यकालीन भारत में सबसे ताकतवर था दौलताबाद किला" (in Hindi). ஆஜ் தக் (இந்தியா). August 2012. http://m.aajtak.in/story.jsp?sid=706050. 
 3. "देवगिरी – दौलताबाद" (Marathi) (September 2012).
 4. "Daulatabad Fort".
 5. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting (India), இந்திய அரசு. பக். 174. 
 6. "ऑक्टोबरपासून हॉट बलून सफारी" (in Marathi). மகாராஷ்டிரா டைம்ஸ் (Khuldabad). 25 May 2015. http://maharashtratimes.indiatimes.com/maharashtra/aurangabad-marathwada/hot-baloon-safari/articleshow/47409289.cms. 
 7. Neha Madaan (March 2015). "Virtual walks through tourist spots may be a reality". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (புனே). http://m.timesofindia.com/city/pune/Virtual-walks-through-tourist-spots-may-be-a-reality/articleshow/46649077.cms. 
 8. "રાજ્યના 'સેવન વંડર્સ’માં અજંતા, સીએસટી, દૌલતાબાદ, લોનાર" (in Gujarati). Divya Bhaskar (இந்தியா). November 2013. http://m.divyabhaskar.co.in/news/Mumbai/2123/MAH-MUM-cst-ajanta-daulatabad-lonar-become-seven-wonders-of-maharashtra-4423883-PHO.html?pg=3. 
 9. "स्वरध्यास फाउंडेशनच्या कलावंतांनी स्वच्छ केला दौलताबाद किल्ला". Divya Marathi (அவுரங்காபாத், மகாராட்டிரம்). 18 November 2014. http://m.divyamarathi.bhaskar.com/news/Aurangabad/5528/MAH-MAR-AUR-dauilatabad-fort-clean-by-actors-4810455-NOR.html. 
 10. Raj Goswami (May 2015). "UID યુનિક ઈન્ડિયન ડોન્કી!" (in Gujarati). Bombay Samachar (இந்தியா). Archived from the original on 2015-05-18. https://web.archive.org/web/20150518090322/http://bombaysamachar.com/frmStoryShow.aspx?sNo=22278. 
 11. "Ticketed Monuments – Maharashtra Daulatabad Fort" (English). இந்தியத் தொல்லியல் ஆய்வகம்.
 12. Qureshi, Dulari (2004). Fort of Daulatabad. New Delhi: Bharatiya Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-8090-072-X. http://books.google.ca/books?id=u15uAAAAMAAJ&q=fort+of+daulatabad&dq=fort+of+daulatabad&hl=en&sa=X&ei=a_seUZneMYid2QWjrYDADA&ved=0CC4Q6AEwAA. பார்த்த நாள்: March 7, 2010. 
 13. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
 14. "अभेद्य थी दौलताबाद किले की सुरक्षा" (Marathi). www.prabhasakshi.com (22 May 2012).
 15. Daulatabad Population – Aurangabad, Maharashtra
 16. "Devgiri-Daultabad Fort" (English).
 17. http://indiarailinfo.com/arrivals/daulatabad-dlb/1719

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Daulatabad, Maharashtra
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலதாபாத்&oldid=3217716" இருந்து மீள்விக்கப்பட்டது