இம்ரூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இம்ரூ அல்லது ஹிம்ரூ என்பது பட்டினையும் பருத்தியையும் கொண்டு நெய்யப்படும் ஒரு துணிவகை. இது அவுரங்காபாத் பகுதியில் தயாரிக்கப்படுகிறது. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை தில்லியில் இருந்து அவுரங்காபாத்தில் உள்ள தௌலதாபாத்துக்கு மாற்றும் போது இம்ரூ இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இம்ரூ என்ற சொல்லானது ஒத்தது என்னும் பொருள் தரும் அம் ரூ என்னும் பெர்சிய வார்த்தையில் இருந்து உருவானது. இத்துணிகள் அவற்றின் தனித்த தோற்றத்திற்காக அறியப்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரூ&oldid=2660275" இலிருந்து மீள்விக்கப்பட்டது