ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
விமானங்கள் தெளிவிற்காக புகைப்பட அளவு பெரிதாக்கப்பட்டது
வரிசை 61: வரிசை 61:


==தல வரலாறு==
==தல வரலாறு==
{{Multiple image|caption_align=center|header_align=center
[[File:Aduthurai abatsahayeswarartemple2.jpg|left|100x150px|thumb|மூலவர் விமானம்]]
|align=left
[[File:Aduthurai abatsahayeswarartemple3.jpg|left|100x150px|thumb|அம்மன் சன்னதி விமானம்]]
| total_width = 350
| width1 = 2530 | height1 = 2530
| width2 = 2530 | height2 = 2530
|direction=horizontal
|image1=Aduthurai abatsahayeswarartemple2.jpg
|image2=Aduthurai abatsahayeswarartemple3.jpg
|footer=மூலவர், அம்மன் சன்னதி விமானங்கள்
|footer_align=center
}}

கிஷ்கிந்தையின் அரசனாக விளங்கிய வாலி திறம்பட ஆட்சிசெய்து வந்தான். அரசுப் பணிகளுக்கு உதவியாகத் தன் தம்பி சுக்ரீவனையும் உடன்வைத்துக் கொண்டான். இந்நிலையில் வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே ஒருமுறை கடும் போர் நடந்தது. வாலியின் கரமே ஓங்கி இருந்தது. எனவே உயிர் தப்பிக்க நினைத்த மாயாவி ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திச் சென்ற வாலியும் ஆக்ரோஷத்துடன் அந்த குகைக்குள் நுழைந்தான். ஆனால் மாயாவி சிக்கவில்லை. அவனைக் கொல்லாமல் இங்கிருந்து நகரக் கூடாது என்று சபதம் எடுத்த வாலி மாயாவியின் வருகைக்காகக் குகைக்குள்ளேயே காத்திருந்தான். நாட்கள் சென்றன. குகைக்குள் போன வாலி இறந்து விட்டான் என்று எண்ணி சுக்கிரீவன் சோகமானான். அடுத்தகட்டமாக
கிஷ்கிந்தையின் அரசனாக விளங்கிய வாலி திறம்பட ஆட்சிசெய்து வந்தான். அரசுப் பணிகளுக்கு உதவியாகத் தன் தம்பி சுக்ரீவனையும் உடன்வைத்துக் கொண்டான். இந்நிலையில் வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே ஒருமுறை கடும் போர் நடந்தது. வாலியின் கரமே ஓங்கி இருந்தது. எனவே உயிர் தப்பிக்க நினைத்த மாயாவி ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திச் சென்ற வாலியும் ஆக்ரோஷத்துடன் அந்த குகைக்குள் நுழைந்தான். ஆனால் மாயாவி சிக்கவில்லை. அவனைக் கொல்லாமல் இங்கிருந்து நகரக் கூடாது என்று சபதம் எடுத்த வாலி மாயாவியின் வருகைக்காகக் குகைக்குள்ளேயே காத்திருந்தான். நாட்கள் சென்றன. குகைக்குள் போன வாலி இறந்து விட்டான் என்று எண்ணி சுக்கிரீவன் சோகமானான். அடுத்தகட்டமாக
அந்தக் குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லை கொண்டு மூடினான். பின் தானே ஆட்சிப்பொறுப்பேற்று மன்னன் ஆனான். பல நாட்கள் கழித்து குகைக்குள் தென்பட்ட மாயாவியை
அந்தக் குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லை கொண்டு மூடினான். பின் தானே ஆட்சிப்பொறுப்பேற்று மன்னன் ஆனான். பல நாட்கள் கழித்து குகைக்குள் தென்பட்ட மாயாவியை

09:10, 28 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தென்குரங்காடுதுறை
பெயர்:தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஆடுதுறை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆபத்சகாயேஸ்வரர்
தாயார்:பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி
தல விருட்சம்:பவள மல்லிகை
தீர்த்தம்:சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

ஆபத்சகாயேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 31ஆவது சிவத்தலமாகும். பவள மல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது.

அமைவிடம்

தென் குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் இத்தலம் உள்ளது.

இறைவன்,இறைவி

இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், தாயார் பவளக்கொடியம்மை.

தல வரலாறு

மூலவர், அம்மன் சன்னதி விமானங்கள்

கிஷ்கிந்தையின் அரசனாக விளங்கிய வாலி திறம்பட ஆட்சிசெய்து வந்தான். அரசுப் பணிகளுக்கு உதவியாகத் தன் தம்பி சுக்ரீவனையும் உடன்வைத்துக் கொண்டான். இந்நிலையில் வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே ஒருமுறை கடும் போர் நடந்தது. வாலியின் கரமே ஓங்கி இருந்தது. எனவே உயிர் தப்பிக்க நினைத்த மாயாவி ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திச் சென்ற வாலியும் ஆக்ரோஷத்துடன் அந்த குகைக்குள் நுழைந்தான். ஆனால் மாயாவி சிக்கவில்லை. அவனைக் கொல்லாமல் இங்கிருந்து நகரக் கூடாது என்று சபதம் எடுத்த வாலி மாயாவியின் வருகைக்காகக் குகைக்குள்ளேயே காத்திருந்தான். நாட்கள் சென்றன. குகைக்குள் போன வாலி இறந்து விட்டான் என்று எண்ணி சுக்கிரீவன் சோகமானான். அடுத்தகட்டமாக அந்தக் குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லை கொண்டு மூடினான். பின் தானே ஆட்சிப்பொறுப்பேற்று மன்னன் ஆனான். பல நாட்கள் கழித்து குகைக்குள் தென்பட்ட மாயாவியை வதம் செய்து அழித்த வாலி பெருமிதமாகக் குகைக்குள் இருந்து வெளிவர முயன்றான். முடியவில்லை. குகையின் வாயிலை மூடி இருந்த பெரிய பாறாங்கல்லைத் தகர்த்து எறிந்து வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சி. அரியணையில் சுக்ரீவன். சதிசெய்து தன்னை ஏமாற்றி விட்டு சுக்ரீவன் ஆட்சியில் அமர்ந்து விட்டான் என்று தவறாக எண்ணிய வாலி சுக்ரீவனை அடித்துவிரட்டி மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அடித்து துரத்தப்பட்ட சுக்ரீவன் எங்கெங்கோ சுற்றினான். இறுதியில் இந்தத் தென்குரங்காடுதுறை தலத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரரை வணங்கினான். இந்த ஈஸ்வரனின் அருள் பெற்றான். பின் ராமபிரானின் அன்பைப் பெற்று அவரது துணையுடன் எதிர்காலத்தில் கிஷ்கிந்தையின் அரசனானான். இழந்த சுகபோகங்களை மீட்டுத்தர இந்த ஈஸ்வரரை வணங்கினால் அருள் புரிவார். அனைத்தையும் பெற்றுத்தருவார். ஸ்வாமியின் கருவறை அகழி அமைப்பை உடையது. வானரப்படையைச் சேர்ந்த சுக்ரீவனால் பூசிக்கப்பட்ட ஈஸ்வரன் என்பதால் இத்தலம் தென்குரங்காடுதுறை என அழைக்கப்படுகிறது. இதற்கேற்ற மாதிரி இங்கு சுக்கிரீவனுக்குத் தனி சந்நிதி இருக்கிறது.

வழிபட்டோர்

இத்தலம் சுக்கிரீவன் வழிபட்ட தலம்.

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். [1]

அருகிலுள்ள கோயில்

இத்தலத்திற்கு வடகிழக்கே பத்து கி.மீ தொலைவில் உள்ள கதிராமங்கலம் ஊரில் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 139